ராசியோ ராசி

Jan 18, 2023 05:33 am

 மேஷம் -ராசி: 

வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும்.

புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்களில் தகுந்த ஆலோசனை பெறவும்.

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.

உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். 

அஸ்வினி : பொறுமை வேண்டும்.

பரணி : கவனமுடன் செயல்படவும்.

கிருத்திகை : நெருக்கடியான நாள்.

ரிஷபம் -ராசி:  

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும்.

வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.

இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் அதிகரிக்கும்.

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

கிருத்திகை : தீர்வு கிடைக்கும்.

ரோகிணி : லாபம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : கற்பனை மேம்படும்.

 மிதுனம் -ராசி: 

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும்.

பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு 

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம். 

மிருகசீரிஷம் : சுபமான நாள்.

திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.

புனர்பூசம் : தெளிவு ஏற்படும்.

 கடகம் -ராசி: 

மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும்.

நிலுவையில் இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள்.

மாற்றமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவங்களும், சூழ்நிலைகளும் உண்டாகும்.

சொத்துப் பிரச்சனைக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். உங்கள் மீதான அவப்பெயர்கள் அகலும்.

எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.


புனர்பூசம் : தைரியம் மேம்படும். 

பூசம் : அனுபவம் உண்டாகும்.

ஆயில்யம் : கவனம் வேண்டும்.

 சிம்மம் -ராசி:  

புதியவரின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள்.

உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

மனை தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.

வியாபார பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வும், அதற்கான உதவியும் கிடைக்கும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறையும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு. 

மகம் : செல்வாக்கு அதிகரிக்கும். 

பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திரம் : உதவி கிடைக்கும்.

 கன்னி -ராசி: 

சுறுசுறுப்புடன் செயல்பட்டு இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

குழந்தைகளின் எண்ணங்களை அறிந்துகொள்வீர்கள். உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும்.

மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். மறைமுகமாக இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

தொழில் ரீதியாக புதிய முயற்சிகளுக்குர நண்பர்களின் உதவி கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

உத்திரம் : சுறுசுறுப்பான நாள்.

அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும். 

சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

 துலாம் -ராசி: 

வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம் மேம்படும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த பயணம் மற்றும் சிந்தனைகள் உண்டாகும்.

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும்.

நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பகைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

சித்திரை : லாபம் அதிகரிக்கும்.

சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 

விசாகம் : கவனம் வேண்டும். 

 விருச்சிகம் -ராசி: 

வாகன மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும்.

எண்ணிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும்.

உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் நீங்கும்.

வீட்டை விரிவுபடுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும்.

மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை.

விசாகம் : சிந்தனை அதிகரிக்கும்.

அனுஷம் : நெருக்கடிகள் நீங்கும்.

கேட்டை : தடைகளை அறிவீர்கள்.

 தனுசு -ராசி: 

தொழில் சார்ந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும்.

உங்களைப் பற்றிய புதுவிதமான புரிதல் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

மூலம் : திறமைகள் வெளிப்படும்.

பூராடம் : அலைச்சலான நாள். 

உத்திராடம் : லாபம் உண்டாகும்.

மகரம் -ராசி: 

நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் சந்திப்பு மனதிற்கு ஒருவித மாற்றத்தை உண்டாக்கும்.

வியாபார பணிகளில் இழுபறிகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.

நெருக்கமானவர்களுடன் பேசும் பொழுது கருத்துக்களில் கவனம் வேண்டும்.

உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும்.

ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

உத்திராடம் : மாற்றமான நாள்.

திருவோணம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும். 

அவிட்டம் : விழிப்புணர்வு வேண்டும்.

 கும்பம் -ராசி. 

வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

உயர் பதவியில் இருப்பவர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். 

குழந்தைகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள்.

மூலிகை சார்ந்த வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும்.

விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு பாசனம் தொடர்பான வசதிகள் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு.

அவிட்டம் : லாபம் உண்டாகும். 

சதயம் : முன்னேற்றமான நாள்.

பூரட்டாதி : வசதிகள் மேம்படும்.

 மீனம் -ராசி: 

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும்.

குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.

விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும்.

உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள்.

பிரபலமான நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

எதிர்ப்புகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.  

பூரட்டாதி : விரயங்கள் உண்டாகும்.

உத்திரட்டாதி : ஆசைகள் அதிகரிக்கும். 

ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.

Read next: பைக்கிற்கு பிறந்த நாள் கொண்டாட்டம்