மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உலகிற்கு விடைகொடுத்தார்

Jun 13, 2021 03:29 pm

ஸியோனா ச்சானா….உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவரான இவர் தனது 76வது வயதில் உயிரிழந்துள்ளார்.

38 மனைவிமார்கள்,89 பிள்ளைகள் மற்றும் 33 பேரப்பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துடன் ஒரே வீட்டில் இவர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மிஸோரம் எனும் பகுதியிலேயே இவர்கள் வாழ்ந்து வந்தனர்.இவரது மறைவை மிஸோரம் முதல்வர் ஸொரம்தங்கா ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தக் குடும்பத்தின் காரணமாகவே அவர் வாழ்ந்த பக்டவங் ட்லங்னம் கிராமம் சுற்றுலா பகுதியாக காணப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளார்.

1945 ஆம் ஆண்டு ஜுலை 21 ஆம் திகதி இவர் பிறந்துள்ளார்.இவரது முதலாவது மனைவியை 17 வயதில் மணம் முடித்துள்ளார்.

ச்சுஹன் தர் ரன் எனும் நான்கு மாடிக்கொண்ட வீட்டில் இவரது குடும்பம் வாழ்ந்து வருகின்றது.

இங்கு சுமார் 100 அறைகள் உள்ளன.இவ்வளவு பெரிய குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ்வது தனக்கு கிடைத்த வரம் என்றும் தான் கடவுளின் விசேட பிறவி என்றும் முன்னர் ஸியோன் தெரிவித்திருந்தார்.

இவரது வீட்டை குறித்த கிராமத்தவர்கள் புதிய தலைமுறையின் இல்லம் என அழைப்பர்.இவரது இந்த வீடும் சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஒரு இடமாக இருந்து வருகின்றது.

Read next: மலையக மக்களையும் ஒடுக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது