செயலிழந்த யூரியூப் வீடியோ ஸ்ட்ரிமிங் உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளது.

5 months

உலகளாவிய ரீதியில் வீடியோ ஸ்ட்ரிமிங் சேவை ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாகவும் அதனை சீர் செய்துள்ளதாகவும் அல்பபெட் நிறுவனத்திற்கு சொந்தமான யூரியூப் அறிவித்துள்ளது.

இந்த செயலிழப்பை டவ்ன்டிடெக்டர்.கொம் எனும் இணையத்தளம் கண்காணித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 286000 முறைப்பாடுகள் பயனாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்சிகளை பார்த்துக்கொண்டிருக்கும் போது இடையூறுகள் ஏற்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாலை 6.53 அளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தடங்களுக்கு வருந்துவதாக அறிவித்துள்ள யூரியூப்.அனைத்து உபகரணங்களிலும் யூரியூப் சேவைகளிலும் சீர் செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து எந்த கருத்தையும் கூகுள் வெளியிடவில்லை என ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

தற்போது சேவை வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Read next: கொவிட் நோயாளர் புதைக்கப்படுவதனால் வைரஸ் நிலத்தடி நீருக்குள் உயிர் வாழக்கூடும்-இலங்கை வல்லுநர்