பிரித்தானியாவில் வீடுகளுக்கு வரும் இளம் பெண்கள் - இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

May 13, 2022 11:43 am

பிரித்தானிய மக்களின் வீடுகளுக்கு வரும் இளம் பெண்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அழகிய இளம்பெண்கள் இருவர் வீடுகளுக்கு சென்று கதவை தட்டி கொள்ளையடிக்கும் புதிய மோசடி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

வீட்டின் கதவைத் தட்டும் பெண்கள் வீட்டில் உள்ள இளைஞர்களை குறி வைத்து ஏமாற்றும் செயலில் முதலில் ஈடுபடுகின்றார்கள்.

அதற்கமைய, நேற்று முன்தினம் பிரித்தானியாவின் வென்டோவர் என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றின் கதவை இரண்டு இளம்பெண்கள் தட்டியுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்தவுடன், தாங்கள் வீடுகளை சுத்தம் செய்பவர்கள் என அந்த பெண்கள் கூறியுள்ளனர். 

ஒரு பெண் தன் கையடக்க தொலைபேசி எண்ணைக் கொடுப்பதற்காக ஒரு துண்டுக் காகிதம் வேண்டும் கூறியுள்ளார். அந்த நபர் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து அந்த பெண்களும் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள்.

ஒரு பெண் அந்த நபர் கொடுத்த காகிதத்தில் ஏதோ ஒரு எண்ணை எழுதும் போது, மற்ற இளம்பெண் அந்த நபரைக் கட்டியணைத்துள்ளார்.

பிறகு முதல் பெண் ஏதோ ஒரு எண் எழுதப்பட்ட காகிதத்தைக் கொடுத்தவுடன் இருவரும் அங்கிருந்து வேகமாக வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அவர்கள் சென்ற பின்னரே அந்த நபர் தனது கையிலிருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் மாயமாகியிருப்பதை உணர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு எச்சரித்துள்ள பொலிஸார், இந்த இளம்பெண்கள் ஒருவரும் இதேபோல் 50 பேரை ஏமாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தங்கள் அழகைக் காட்டி ஆண்களை ஏமாற்றி சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ரோலக்ஸ் முதலான கைக்கடிகாரங்களை அந்த பெண்கள் கொள்ளையடித்துள்ளனர்.

20 வயதுகளிலிருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாட்டவர்களான அந்த இளம்பெண்கள் இருவரையும் பொஸார் தேடி வருவதுடன், இந்த பெண்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read next: தர்ம அடி கொடுத்த ஊர்மக்கள்