இலங்கையில் தந்தைக்கு 7 மகள்கள் செய்த மோசமான செயல்

Sep 19, 2022 12:11 pm

பாதுக்க பிரதேசத்தில் தன்னை  பராமரித்து - கவனித்துக் கொள்வதற்கு புதல்விகள் 2 லட்சம் ரூபா கோருவதாக தெரிவித்து,  82 வயதான தந்தையொருவர் நியாயம்கோரி பாதுக்க பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.  

தனக்கு ஏழு புதல்விகள் இருக்கின்றனர் எனவும்,  அவர்களில் எவரும் தன்னை கவனிக்க முன்வரவில்லையென்றும் அந்த முதியவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.  

இதனையடுத்து  புதல்விகள் ஏழு பேரும் பொலிஸ்  நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு ,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக தெரியவந்துள்ளது. 

பெற்ற தந்தையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு புதல்விகளுக்கு இருக்கின்றது. எனவே ஒரு வருடத்துக்கு  ஒருவர் தந்தையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டும் என பொலிஸ் பரிசோதகர் தெரிவித்த போதும் , அதனை புதல்விகள் ஏற்கவில்லை.

இதனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லபோவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பிலியந்தலையிலுள்ள புதல்வி ஒருவர் , தற்காலிகமாக தந்தையை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.


Read next: தனியார் டிராவல்ஸ் ஓட்டுனர் சம்பளம் கேட்டதால் தாக்கிய ஊழியர்கள்