சமூக வலைத்தளங்களில் மூழ்கிய உலக மக்கள் - வெளிவந்த அதிர்ச்சி அறிக்கை

Jan 23, 2023 01:18 am

உலகெங்கும் Android தொலைபேசிப் பாவனையாளர்கள் கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில்  செலவிட்ட மொத்த நேரம் இரண்டு ட்ரில்லியன் (trillion) அல்லது 2ஆயிரம் மில்லியன் மணித்தியாலங்கள்  என தெரியவந்துள்ளது.

இது கடந்த 2021 ஆம் ஆண்டை விடவும் 17 வீதம் அதிகம் ஆகும். 

தொலைபேசிப் பாவனையாளர்களது தரவுகளின் அடிப்படையில் இந்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன. 

நாளாந்தம் ஒருவர் சராசரி ஐந்து மணித்தியாலங்களை சமூக வலைத் தளங்களில் செலவிட்டுள்ளார். 

அதிலும் இன்ஸ்ரகிராம், டிக்டொக், பேஸ் புக் ஆகிய மூன்றும் முதலிடத்தில் இருந்துள்ளன. 

தொலைபேசித் தரவுகளின் படி பிரான்ஸில் கடந்த ஆண்டு 2.13 பில்லியன் புதிய செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 

அவற்றில் வட்ஸ்அப் (WhatsApp) டிக்டொக், மற்றும் டொக்ரொலிப் (Doctolib) ஆகியவை அதிகம் ஆகும். 

வயதின் அடிப்படையில், 18-24 வயதினர்  Instagram, Snapchat, Netflix ஆகியவற்றையும் 25-44 வயதுப் பிரிவினர் (WhatsApp, Facebook, Messenger ஆகியவற்றையும் 45 வயதுக்கு மேற்பட்டோரும் அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Read next: ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ் - எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை