கொரோனா தொற்றில் உலகம் தோல்வி அடைந்துவிட்டது.

Jul 21, 2021 08:22 am

மற்றுமொரு கொரோனா அலைக்கு உலகம் தயாராகுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனம் கெப்ரேயேஸஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 ஒரு பரீட்சை,அதில் உலகம் தோல்வியடைந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு அங்கத்தவர்களுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துமாறும் சரியான திட்டமிடலும்,நடைமுறையும் காணப்பட்டால் இலக்கை அடைய முடியும் என்பதை ஒலிம்பிக் மூலம் உலக நாடுகள் புரிந்துக்கொள்ளட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்;,மேலும் பலர் உயிருக்கு போராடுகின்றனர் என்றும் கடந்த வருடத்தையும் விட இவ்வருடம் கொவிட் உயிரிழப்புகள் இரட்டிப்பாக உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பகுதிகளிலும் ஓயும் வரை தொற்றின் அச்சுறுத்தல் எங்கும் நீங்காது.தொற்று ஒழிந்து விட்டது என்று எவரேனும் நினைத்தால் அவர்கள் மூடர்கள் என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் தொற்றுகள் அதிகரித்திருந்தாலும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய உள்ளக அரங்கில் நடைபெறும்.

உலகை ஒன்றிணைக்கும் தருணமாகவும் கடுந்தொற்றை ஒழிக்க அனைவரது ஒத்துழைப்பை உணர்த்துவதாகவும் இந்த ஒலிம்பிக் போட்டிகள் அமையட்டும் என டெட்ரோஸ் குறிப்பிட்டார்.

உரையின்; இறுதியில் சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தோமஸ் பெச்சினால் அடையாளச்சின்னமாக ஒலிம்பிக் சுடர் டெட்ரோசுக்கு வழங்கப்பட்டது.


Read next: 5,000 ரூபா கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகளால் இழந்த பணத்தை மீள பெற நடவடிக்கை!