உக்ரைன் - ரஷ்யப் போர்! உலகம் மனிதாபிமான பேரழிவில் உள்ளதாக தகவல்

Apr 22, 2022 06:48 am

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உணவுப் பிரச்சினை   அதிகரித்திருக்கும் நிலையில் உலகம் மனிதாபிமான பேரழிவு ஒன்றுக்கு முகம்கொடுத்திருப்பதாக உலக வங்கி தலைவர் டேவிட் மெல்பாஸ் எச்சரித்துள்ளார்.

உணவு விலை சாதனை அளவு அதிகரிப்பதால் பலநூறு மில்லியன் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மெல்பாஸ் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு மனிதாபிமான பேரழிவு என்பதால், ஊட்டச்சத்தில் வீழ்ச்சி ஏற்படும். இதனால் எதுவும் செய்ய முடியாத அரசுகள் அரசியல் சாவலை எதிர்கொள்ளும். 

அதற்கு அவர்கள் காரணம் இல்லை என்றபோதும் விலை அதிகரிப்பை காண்பார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

உணவு விலை ‘பாரிய அளவாக” 37 வீதம் அதிகரிக்கும் என்று உலக வங்கி கணித்திருப்பதோடு அது ஏழைகளுக்கு பெரிதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

“இதனால் எண்ணெய்கள், தானியங்கள் என அனைத்து வகையான உணவுகளும் பாதிக்கப்படுவதோடு தொடர்ந்து பயிர்கள், சோளப் பயிர்கள் உயரும், ஏனெனில் கோதுமை உயரும்போதும் இவை அனைத்தும் உயரும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Read next: நிலத்தடி தளத்தை குறிவைத்து இரண்டாவது முறையாக வான் தாக்குதல்!