சீரம் நிறுவனம் இந்தியாவின் பாக்கியம் என உலக வங்கி தலைவர் தெரிவிப்பு .

1 week

உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனம், இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என உலக வங்கி தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், தடுப்பூசி போடும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து  தாம்  மகிழ்ச்சி அடைவதாகவும்,  இது உலகின் அனைத்து நாடுகளும் உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கை  எனவும் வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமின்றி, ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசிகளை விரைவாக வழங்குவது அவசியம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த ஆண்டு மத்தியில், உலக வங்கியுடன், 50 நாடுகளுக்கான நிதி ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்திருந்த அவர்,  இந்த நிதியின் வாயிலாக, அந்த நாடுகள், தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியுமாக இருப்பதுடன் இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் இந்தியா நிறுவனத்துடன், தமக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனம், அங்கு அமைந்திருப்பது, அந்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார் 

Read next: மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் தீர்மானம்.