பொது வெளியில் பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு சரமாரியாக கசையடி தண்டனை

Nov 24, 2022 01:02 pm

ஆப்கானிஸ்தானில் மூன்று பெண்கள் உட்பட 12 பேர் தலிபான்களால் சரமாரியாக  கசையடி தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சாட்டையால் தாக்கப்பட்டவர்கள் விபச்சாரம், கொள்ளை மற்றும் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று கண்டறியப்பட்டனர்.

கடந்த ஒரு மாதத்தில்இஸ்லாமிய ஆட்சியால் மக்கள் கசையடிக்கு ஆளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளில், தொண்ணூறுகளுக்கு முன்னர் தலிபான் ஆட்சியில் இந்த கடுமையான நடைமுறை பயன்படுத்தப்பட்டது.

தண்டனை முறையின் மறு அறிமுகம், தலிபான் ஆட்சி மீண்டும் தற்போதைய நிலைக்குத் திரும்புகிறது என்பதற்கான சில சமிக்ஞைகளை அனுப்புகிறது.

பெண்களுக்கு 21 கசையடிகளும், ஆண்களுக்கு 39 கசையடிகளும் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கசையடிக்கு உள்ளான மூன்று பெண்களும் தண்டனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர், மேலும் தாக்கப்பட்ட ஆண்களில் ஒரு குழு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வடக்கு ஆப்கானிஸ்தானின் தகார் மாகாணத்தில் கடந்த வாரம் 19 பேர் இதேபோல் சரமாரியாக தாக்கப்பட்டதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read next: உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி; தடையை மீறிய ஜேர்மன் உள்துறை அமைச்சர்!