கொரோனா நோயாளிகளை எளிமையாக கண்காணிக்கும் வகையிலான வயர்லெஸ் சென்சார் கருவிகள்!

Sep 26, 2021 09:11 am

கொரோனா நோயாளிகளை எளிமையாக கண்காணிக்கும் வகையிலான வயர்லெஸ் சென்சார் கருவிகள் இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவசமாக பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், லைப் சைன் என்ற தனியார் நிறுவனம் சார்பில் 85 லட்சம் ரூபாய் மதிப்பில் 1000 வயர்லெஸ் சென்சார் கருவிகள் மற்றும் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சியினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். 

விழாவில் அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேல், லைப் சைன் நிறுவன இயக்குநர் ஹாரி சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Read next: எஸ்.பி.பி.க்கு மணிமண்டபம் ஒரு ஆண்டில் முடிவடையும்!