ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இரத்துச் செய்யப்படலாம்!

Jul 21, 2021 12:12 pm

ஒலிம்பிக் விளையாட்டை ரத்து செய்யும் திட்டம் நிராகரிப்படவில்லை என்று டோக்யோ ஒலிம்பிக் 2020 ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவர் டொஷிரோ முடோ தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நிலவரம் கண்காணிக்கப்பட்டு, தேவைப்பட்டால் இது தொடர்பில் “ஆலோசனை” நடத்தப்படும் என்று  கூறியுள்ளார்.

ஒலிம்பிக் விழா வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இந்த விளையாட்டுகளில் சம்பந்தப்பட்ட 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

“ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் ரத்து செய்யப்படாது” என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச் குறிப்பிட்ட அதே நாளில், இதனை தெரிவித்துள்ளார் டோக்யோ ஒலிம்பிக் 2020 ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவர் டொஷிரோ.

பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என்று இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொரோனாவால் தற்போதைய நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த டொஷிரோ, “கொரோனா பாதிப்பு அதிகமானால் இது குறித்து தொடர்ந்து ஆலோசிப்போம்” என தெரிவித்தார்.

Read next: வதிவிட உரிமைக் கோரி பெல்ஜியத்தில் உண்ணாவிரதம்