மிருகங்களில் கொரோனா தொற்று ஏற்படுவது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை

2 months

மின்க் எனும் ஒரு வகை விலங்கிடம் கொரோனா தொற்றியுள்ளமை அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தேசிய ரீதியில் அவற்றை கொல்வதற்கு டென்மார்க் அறிவித்துள்ளது.

மின்க் என்பது மெல்லிய உரோமத்தைக்கொண்ட ஒரு அரை நீர்வாழ் விலங்கினம்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் வைரஸ் பரவுவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றென உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனா வைரஸ் தொடர்பிலான தொழிநுட்ப தலைவர் மரியா வென் கேர்க்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸில் இவ்வாறான பிறழ்வுகள் ஏற்படுவது சாதாரணமானது. வைரஸில் இவ்வாறான மாற்றங்களை ஆரம்பத்தில் இருந்தே நாம் கண்காணித்து வருகின்றோம்.என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்கை விடவும் மற்றைய பண்ணை விலங்குகளிடம் ஆபத்து மிகவும் குறைவாகே காணப்படுவதாகவும் இந்த விலங்கு மூலம் இலகுவில் பாதிக்கக்கூடியதாக இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

டென்மார்க்கில் விலங்குகளிடத்தில் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய முடக்கத்தை அறிவித்துள்ளதுடன் இவ்வாரம் நாட்டில் உள்ள முழு மின்க் விலங்குகளையும் அழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பிறழ்வானது கொவிட் 19 வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பின் செயற்றிறன் தொடர்பிலான அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

எவ்வாறாயினும் மின்கில் வைரஸ் பிறழ்வு காணப்படுவது குறித்த முடிவுக்கு செல்வது மிகவும் விரைவாக உள்ளதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதம விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

தாக்கங்கள் எவ்வாறு என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.எனவே இது கொவிட் தடுப்பு மருந்தின் செயற்றிறனில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற முடிவுக்கு வருவது சரியென நான் நினைக்கவில்லை.அவ்வாறு நிகழும் என்பதற்கு இப்போது எந்த ஆதாரமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சார்ஸ்கோவ் - 2 வைரஸின் பிறழ்வு திரிபுகள் 12 பேரிடமும் ஐந்து மின்க் விலங்குகளிடமும் அடையாளம் காணப்பட்டதாக தொற்றுநோய் தொடர்பில் செயற்படும் டென்மார்க்கில் உள்ள சீரம் நிலையம் தெரிவித்துள்ளது.

புதிய விலங்குகளிடத்தில் இந்த வைரஸ் தொற்றக்கூடாது என்பதற்காக தற்போதுள்ள அனைத்து மின்க் விலங்குகளையும் அழிக்க டென்மார்க் முடிவுசெய்துள்ளதாக கேர்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான ஆபத்து மீளாய்வை உலக சுகாதார ஸ்தாபனம் நிறைவு செய்யுமென்றும் சில மணித்தியாலங்களுக்குள் ஸ்தாபன அங்கத்தவர்களிடத்தில் பகிர்ந்துக்கொள்ளப்படும் என்றும் அவசரகால நிலை நிபுணர் மைக் ரியான் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவின் உணவு வூஹான் உணவு சந்தையில் ஆந்தைகளிடம் இருந்து மனிதர்களுக்கு முதலில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.என்றாலும இது குறித்த சந்தேகங்களும் காணப்படுகின்றன.

பூனைகள் போன்ற ஏனைய பாலூட்டிகளுக்கும் இந்த வைரஸ் தொற்றுவதாக கண்டறியப்பட்டது.

அத்துடன் எலி மற்றும் மற்றுமொரு பூனையினமான பெரெட் ஆகியவை மருத்துவ ஆராய்ச்சிக்காக தொற்றுக்கு உட்படுத்தப்பட்டன.

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வரக்கூடிய சாத்தியம் அதிகமுள்ளதாக மைக் ரியான் தெரிவித்துள்ளார்.

பாலூட்டிகள் சிறந்த வைரஸ் கடத்திகள் என்பதுடன் வைரஸ் அதிகளவில் உருவாகும்.என்றும் ரையன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைரஸ் தொற்றை தடுக்க பன்றிகள் மற்றும் கோழிப்பண்ணைகள் தொடர்பில் கடுமையான உயர்பல்வகைமை பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜுலை மாதமளவில் ஸ்பெய்ன் பண்ணையில் உள்ள மின்க் விலங்குகளிடம் கொரோனா தொற்று பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read next: ஸ்கொட்லாந்தில் சிறுவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.