எதிர்வரும் நாட்களின் இலங்கைக்கு ஏற்படவுள்ள நிலை என்ன? பிபிசியிடம் கூறிய ரணில்

May 13, 2022 01:03 pm

இலங்கையின்  பொருளாதார நிலை மேலும் மோசமடையும் என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர் பிபிசிக்கு வழங்கியுள்ள முதலாவது பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் அது சாத்தியமில்லை.

மக்களிற்கு துன்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி  மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும். மக்களிற்கு மூன்று நேரம் உணவு கிடைப்பதை உறுதி செய்யப்போகின்றேன்.

உலகநாடுகள் இலங்கைக்கு மேலும் நிதியுதவியை வழங்கவேண்டும். ரணில் விக்ரமசிங்க பட்டினி நிலை- நெருக்கடி உருவாகாது நாங்கள் உணவுகளை கண்டுபிடிப்போம்.

இலங்கையின் பொருளாதாரத்தை முறிந்தது என வர்ணித்துள்ள பிரதமர் பொறுமையாயிருங்கள் நான் முன்னைய நிலையை மீண்டும் ஏற்படுத்துவேன் என்பதே  இலங்கை மக்களிற்கான எனது செய்தி.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளை தான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது இடம்பெறாது.

குற்றம்சாட்டுவது நடவடிக்கைகளிற்கு வழிவகுக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Read next: நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ராகுல் காந்தி