பிரித்தானியா மீது அணுவாயு தாக்குதல் மேற்கொண்டால் என்ன நடக்கும்? அதிர்ச்சி தகவல்

May 14, 2022 11:15 am

ரஷ்யா அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவைத் தாக்கினால், என்ன நடக்கும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யா வீசும் ஏவுகணைகளை தாக்குதல் மேற்கொண்டால் பிரித்தானியாவால் அதனை தடுக்கவோ, அழிக்கவோ முடியாது என தெரியவந்துள்ளது.

பிரித்தானியா உட்பட உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்து வருகிறது. 

எனினும் ரஷ்யா ஏமாற்றிக் கொண்டிருப்பதகாவும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் பிரித்தானியா கூறியுள்ளது.

அப்படி ஒரு நிலை உருவானால், பிரித்தானியாவால் தன்னை நோக்கி வரும் ஏவுகணைகளை தடுக்கவோ, அழிக்கவோ முடியாது என, லெய்செஸ்டர் பல்கலைக்கழக சர்வதேச உறவுகள் நிபுணரான பேராசிரியர் எண்ட்ரூ படர் தெரிவித்துள்ளார்.

யாராவது அணு ஆயுதம் கொண்டு தாக்கினால், நாங்களும் அணு ஆயுதம் கொண்டு திருப்பித் தாக்குவோம் என்ற நிலைப்பாட்டையே பிரித்தானியா கொண்டுள்ளது.

யாராவது அணு ஆயுத ஏவுகணை கொண்டு தாக்கினால், அதை நடு வானிலேயே தடுத்து அழிக்கும் தொழில்நுட்பம் பிரித்தானியாவிடம் இல்லை. 

பிரித்தானியாவால் ஒரு அணு ஆயுத தாக்குதலையே தாங்க முடியாது. அப்படி இருக்கும்போது, பல தாக்குதல்கள் என்றால், பிரித்தானியா என்னும் ஒரு நாடே இல்லாமல் போய்விடும் என பேராசிரியர் எண்ட்ரூ படர் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார். 

அதனால், அணு ஆயுத தாக்குதல்கள் நிகழாமல் தடுப்பதுதான், சிறந்த விடயமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, சண்டையைத் தவிர்ப்பதுதான் நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி என பேராசிரியர் எண்ட்ரூ படர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read next: பிரதமர் ரணில் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம்!