ராசிபலன் வழியில் புதன்கிழமை பலன்கள்

May 10, 2022 11:41 pm

சித்திரை: 28

புதன் கிழமை

11- 05- 2022 

ராசி- பலன்கள்

மேஷம் -ராசி

புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். தடைபட்ட தனவரவு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். விருப்பம் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.

பரணி : வரவு மேம்படும்.

கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.


ரிஷபம் -ராசி

தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உயர்கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் அகலும். வாகன மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவியின் மூலம் நெருக்கடிகள் குறையும். தேவைகள் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும். 

ரோகிணி : தடைகள் அகலும். 

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.


மிதுனம் -ராசி

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நன்மையை ஏற்படுத்தும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.

மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

திருவாதிரை : நன்மையான நாள்.

புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.


கடகம் -ராசி

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதுவிதமான பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 

ஆயில்யம் : புத்துணர்ச்சியான நாள்.


சிம்மம் -ராசி

மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். மனதில் எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளும், முயற்சிகளும் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

மகம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

பூரம் : தன்னம்பிக்கை மேம்படும். 

உத்திரம் : எதிர்ப்புகள் குறையும். 


கன்னி -ராசி

தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

உத்திரம் : அனுசரித்து செல்லவும். 

அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.

சித்திரை : ஆதாயம் உண்டாகும்.


துலாம் -ராசி

பலவிதமான சிந்தனைகளிலிருந்து தெளிவு கிடைக்கும். உடனிருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் தொடர்பான எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தெளிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

சித்திரை : தெளிவு ஏற்படும்.

சுவாதி : உதவி சாதகமாகும்.

விசாகம் : முடிவு கிடைக்கும்.


விருச்சிகம் -ராசி

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பிள்ளைகளால் சுபவிரயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். இழுபறியான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

விசாகம் : அறிமுகம் உண்டாகும்.

அனுஷம் : அனுகூலம் ஏற்படும்.

கேட்டை : பயணங்கள் கைகூடும்.


தனுசு -ராசி

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலைகள் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறைந்து முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல்.

மூலம் : குழப்பம் குறையும். 

பூராடம் : விருப்பம் நிறைவேறும்.

உத்திராடம் : முன்னேற்றமான நாள்.


மகரம் -ராசி

இனம்புரியாத எண்ணங்களின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகளில் காலதாமதமாக எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் நிதானம், கவனம், பொறுமை, மிக அவசியம். உடன் பிறந்தவர்களின் வழியில் அனுகூலமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வரவுகளில் கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

உத்திராடம் : சோர்வு ஏற்படும். 

திருவோணம் : அனுகூலமற்ற நாள். 

அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.


கும்பம் -ராசி

குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் ஆதாயமடைவீர்கள். சுகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.  

சதயம் : அனுபவம் வெளிப்படும்.

பூரட்டாதி : ஆதாயமான நாள்.


மீனம் -ராசி

தொழில் சம்பந்தமான முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகம் நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் உண்டாகும். எதிர்பாராத சிலரின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். அலைச்சல்கள் ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

பூரட்டாதி : பயணங்கள் உண்டாகும்.

உத்திரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.

ரேவதி : கவனம் வேண்டும்.

Read next: புதன்கிழமை ஹோரை