திருமணத்திற்கு தீயுடன் வந்த திருமண ஜோடி - வைரலான வீடியோ

May 14, 2022 05:54 am

ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் கலைஞர்களாக பணியாற்றி வருபவர்கள் கேப் ஜெசோப் மற்றும் ஆம்பிர் பாம்பிர்  பல ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றிவந்த இவர்கள் ஒரு கட்டத்தில் காதலிக்க தொடங்கினர். இந்த காதல் ஜோடி அண்மையில் திருமணம் செய்துகொண்டுள்ளது. ஸ்டண்ட் கலைஞர்களான இவர்கள் திருமணத்திலும் ஸ்டண்ட் சாகசங்களை செய்து அசத்தி உள்ளனர்.

கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதி, தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டண்ட் சாகசங்களை செய்து அசத்தி உள்ளனர். வரவேற்பு நிகழ்ச்சியில் இவர்கள் கொடுத்த எண்ட்ரி, அங்கு வந்திருந்தவர்களை பதைபதைக்க வைத்தது. ஏனெனில், அவர்கள் இருவரும் உடலில் தீவைத்துக் கொண்டு ஜோடியாக நடந்து வந்தனர்.

அவர்கள் இருவரும் உடலில் தீவைத்துக்கொண்டு நடந்து வந்ததைப் பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அது திட்டமிட்டு செய்யப்பட்ட சாகசம் என தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். உடலில் தீவைத்துக் கொண்டு அவர்கள் செய்த இந்த சாகச நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CddqI22o-cv/?utm_source=ig_web_copy_linkRead next: புதினின் முன்னாள் மனைவி, ரகசிய காதலி மீது புதிய தடை.?