செவ்வாயில் நீர் இருந்தது உறுதி! சீன விஞ்ஞானிகள்

May 14, 2022 07:59 am

செவ்வாய்க்கோளின் மேற்பரப்பில் 700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரை தண்ணீர் இருந்ததாக சீனாவின் சுரொங் விண்கலம் சேகரித்துள்ள மாதிரிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சீன விஞ்ஞானிகள் கூறினர்.

இதற்கு முன்னர், சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரைதான் செவ்வாய்க்கோளின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததாக நம்பப்பட்டது. 

இந்நிலையில் இந்த புதிய கண்டுபிடிப்பு செவ்வாயில் முன்னர் நம்பப்பட்டதை விடவும் நீரின் இயக்கம் அதிகம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது அதன் மேற்பரப்பில் தண்ணீர் இல்லை.

செவ்வாய்க்கோளை ஆராய்ந்துகொண்டிருக்கும் சுரொங் விண்கலம் கடந்த ஆண்டு மே மாதம் அங்கு சென்றடைந்தது. 

இதுவரை அந்த விண்கலம் செவ்வாய் மேற்பரப்பில் சுமார் 2,000 மீற்றர் உலாவி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

செவ்வாய்க்கோளின் நிலத்தடியில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டால்தான், அங்கு உயிர் வாழும் சாத்தியத்தை நிர்ணயிக்க முடியும்; மனிதர்கள் அங்கு சென்று ஆராயவும் முடியும்.

Read next: வானிலை தகவல்:இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!! எந்த மாவட்டங்களில் தெரியுமா?