அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்

Mar 18, 2023 07:26 pm

அமெரிக்காவுடனான போருக்கு தயாராகும் வகையில் 800,000 வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் தானாக முன்வந்து ராணுவத்தில் சேர்ந்த குடியிருப்பாளர்கள் என்றும், அவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என்றும் வடகொரிய அரசு வெளியிட்ட அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

தற்போது அமெரிக்காவும் தென்கொரியாவும் வடகொரியாவை அச்சுறுத்தும் வகையில் பாரிய போர் பயிற்சியை ஆரம்பித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வடகொரியாவும் தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. எனவே, அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் எந்த நேரத்திலும் போர் மூளலாம் என போர் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read next: இந்தியன் வெல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய எலினா ரைபாகினா