அஸ்டாவை பிரித்தானிய செல்வந்த சகோதரர்களுக்கு விற்பனை செய்கின்றது வோல்ட்மார்ட்

1 month

Pthoto: EG Group

பிரித்தானிய செல்வந்தர் இஸ்ஸா சகோதரர்களும் தனியார் பங்கு நிறுவனமான ரீடீஆர் கெப்பிட்டல் ஆகியன பிரித்தானிய சுப்பர்மார்க்கட் வலையமைப்பான அஸ்டாவை வோல்மார்ட்டிடம் இருந்து கொள்வனவு பெற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளன.

இதன் வர்த்தக பெறுமதி 8.8 பில்லியன் டொலர்கள்.(6.82 பில்லியன் பவுண்ஸ்)என்பதுடன் அதிகளவான சிறிய வர்த்தக நிலையங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஈஜீ எரிவாயு நிரப்பு நிலையத்தை மொஹ்சின் மற்றும் {ப்ரா இஸ்ஸா ஆகிய இருவரும் ஸ்தாபித்தனர்.இந்த நிலையில் 1999 பின்னர் அஸ்டாவை பிரித்தானிய உரித்தின் கீழ் கொண்டு வருவதுடன்  வோல்மார்ட் 6.7 பில்லியன் பவுண்ஸ்களை வர்த்தகத்திற்காக செலுத்துகின்றது.

பிரித்தானியாவின் மூன்றாவது மிகப்பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலியை சிறிய சிறிய அளவான வர்த்தக நிலையங்களாக விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதுடன் தனது மி கப்பெரிய பல்பொருள் அமைப்புக்குள் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.இது டெஸ்க்கோ மற்றும் செய்ன்ஸ்பரி ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.


குறிப்பிடப்படாத பங்கை வர்த்தகத்தில் முதலீடு செய்வதன் மூலம் தற்போதைய வணிக உறவு மற்றும் சபை பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும்.அஸ்டாவின் பொறுப்பாளராக ரொஜர பேர்ன்லி தொடர்ந்தும் காணப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

வோல்மார்ட்டின் வெற்றிகரமான காலத்தின் பின்னர் இங்கிலாந்தில் உள்ள சமூகங்களில் சிறப்பான சேவையை ஆற்றுவதற்காக ஒரு வேறுப்பட்ட வியாபாரத்தை  ஏற்படுத்த அஸ்டாவுக்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பதாக ஸ்தாபகர்கள் தெரிவித்துள்ளனர்.

விலையை குறைந்தளவில் பேணுவதற்கும் விநியோக சங்கிலியை பாதுகாப்பதற்கும் அடுத்த மூன்று வருடங்களுக்கு  பில்லியன் பவுண்களை அஸ்டாவில் முதலிட புதிய உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

வட இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் தலைமையகத்தை தக்க வைத்துக்கொள்ளும் அஸ்டாவின் இந்த இணக்கப்பாட்டை  பிரித்தானிய நிதி அமைச்சர் ரிஷி சுனக் வரவேற்றுள்ளார்.

பிரித்தானியாவின் அதி போட்டித்தன்மை கொண்ட பல்பொருள் அங்காடி துறை கொவிட் 19 காரணமாக இவ்வருடம் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.நீண்ட கால முடக்க நிலை காரணமாக பெருமளவான பொருட்கள் தேங்கி கிடக்கின்றமையே இதற்கான காரணம்.

இந்த நிலையில் அஸ்டாவின் விற்பனை அதிகரிந்தாலும் அதன் சங்கிலித் தொடர் டெஸ்கோ செய்ஸ்பரி மற்றும் மொரிஸன்ஸ் ஆகியவற்றுக்கு பின்னிலையிலேயே காணப்படுகின்றது.

குறித்த மிகப்பெரிய நான்கு சுப்பர்மார்க்கட் சங்கிலி தொடர்கள்; அண்மை காலமாக மலிவு விற்பனை செய்யும் ஜேர்மனியின் அல்டி மற்றும் லிட்ல் இடமிருந்து போட்டியை எதிர்கொள்கின்றன.

வோல்மார்ட் முன்னர் அஸ்டாவை செய்ன்ஸ்பரிக்கு 7.3 பில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது.ஆனாலும் இந்த முயற்சி கடந்த வருடம் பிரித்தானிய போட்டித்தன்மை கட்டுப்பாட்டாளர்களினால் முறியடிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குறைந்த விலை அறிவிப்பானது அஸ்டா மற்றும் செய்ன்ஸ்பரியின் ஒன்றிணைந்த நலன்களுக்கானவை.

Read next: டிரம்ப் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு செல்கிறார்