உணவின் பின் 2 நிமிடங்கள் நடந்தால் உடலில் ஏற்படும் மாற்றம் - ஆய்வில் வெளியான தகவல்

Oct 10, 2022 05:00 pm

பரபரபான உலகில் ஒவ்வோர் உணவு நேரத்துக்குப் பிறகும் 2 நிமிடங்கள் நடந்தால்கூட உடலுக்குப் பலன் கிடைக்கும் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இரத்தச் சர்க்கரை அளவில் அமர்ந்திருப்பது அல்லது நிற்பது அல்லது நடப்பது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய 7 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் சிலர்  Sports Medicine சஞ்சிகையில் முடிவுகளை வெளியிட்டனர்.

Surprising

5 ஆய்வுகளில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் நீரிழிவு நோய் இல்லை என தெரியவந்துள்ளது.

எஞ்சிய 2 ஆய்வுகளில் நீரிழிவு நோய் உள்ளவர்களும் இல்லாதவர்களும் பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒவ்வோர் அரை மணி நேரத்துக்கும் 2 முதல் 5 நிமிடங்கள் வரை நிற்கும்படி அல்லது நடக்கும்படிக் கூறப்பட்டனர். 

அந்தப் போக்கை ஒருநாள் முழுக்கத் தொடரும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஒவ்வோர் உணவு நேரத்துக்குப் பிறகும் 2 நிமிடங்கள் நடந்தால்கூட அது ரத்தச் சர்க்கரை அளவைச் சரிப்படுத்த உதவுவதாக ஆய்வுகளில் தெரியவந்தது.

How

அமர்ந்திருப்பதுடன் ஒப்பிடுகையில் நடப்பதே ரத்தச் சர்க்கரை அளவை மேம்படச் செய்வதாகக் கூறப்பட்டது.

அமர்ந்திருப்பது, நிற்பது, நடப்பது ஆகியவற்றில் நடப்பதே சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

நடக்கும்போது உடலின் தசைகள் மேலும் துடிப்பாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டது.

குறிப்பாகச் சாப்பிட்டு ஒரு மணிநேரத்திலிருந்து 90 ஒன்றரை மணிநேரத்துக்குள் மெதுநடையில் ஈடுபடுவது, ரத்தச் சர்க்கரை அளவைச் சரிசெய்ய உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

Read next: இந்தியாவுக்கு பயணிக்கும் அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!