இந்தியாவில் கொரோனா தொற்று ஆறு மில்லியனை கடந்துள்ளது

3 weeks

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஆறு மில்லியனை அடைந்துள்ளது.நாட்டில் உள்ள 1.3 பில்லியன் மக்களுக்கும் எங்கும் இல்லாத அளவுக்கு ஹேர்ட் நோய்எதிர்ப்பு சக்தியின் தேவை ஏற்பட்டுள்ளது. இது இந்து மத விழாக்களுக்கு பக்தர்கள் செல்வது குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

11 நாட்களுக்குள் மில்லியன் கணக்கானோர் தொற்றுக்குள்ளாயுள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் அதிக தொற்றாளர்கள் பதிவாகியுள்ள அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா காணப்படுகின்றது.

கடந்த வாரம் அமெரிக்கா 7 மில்லியன் தொற்றாளர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறிருக்க ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தசரா மற்றும் தீபாவளி கொண்டாட்டங்கள் இருக்கின்றமையினால் தொற்றுக்குறித்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.

கூட்டம் கூடுவதை தடுப்பதற்கும் வேறுபகுதிகளில் இருந்து மக்கள் பயணிப்பதை தவிர்ப்பதற்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

கொண்டாட்ட காலங்கள் என்றால் மக்களின் அதிக கொள்வனவில் ஈடுபடுவார்கள்.ஆனால் இவ்வருடம் பொருளாதார சரிவு மற்றும் தொற்று குறித்த கட்டுப்பாடுகள் காரணமாக தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒக்டோபர் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் நவராத்ரி பூஜையை இம்முறை நடத்தபோவதில்லை என மேற்கு குஜராத் அறிவித்துள்ளது.

அஹமதாபாத் சுரத் மற்றும் வடோதரா போன்ற முக்கிய நகரங்களில் பத்துக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும்.ஆனால் இம்முறை அவற்றை பெரும்பாலும் இரத்து செய்வதற்கே தீர்மானித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடுவார்கள் என்பதுடன் பாரியளவான நடன நிகழ்வுகளும் இடம்பெறும்.இதன் மூலம் சுமார் 250 தொடக்கம் 300 பேர் வரையிலானவர்களுக்கு தற்காலிக தொழில் வாய்ப்பு கிடைக்கும் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 82170 புதிய தொற்றாளர்கள் பதிவாகியு;ளதாக இந்திய சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாளாந்த உயிரிழப்பு 1039 ஆக காணப்படுவதுடன் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 95542 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாளாந்த தொற்றுகளின் எண்ணிக்கை இம்மாத ஆரம்பத்திலும் பார்க்க சற்று வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் மக்கள் தொடர்ந்தும் தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Read next: தலிபான்கள் எச்சரிக்கைக்கு மத்தியிலும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்ற பெண்