அவுஸ்திரேலிய தலைநகரின் பொது முடக்கம் நீடிப்பு

Sep 15, 2021 03:18 am

அவுஸ்திரேலிய தலைநகர் கென்பராவில் வரும் ஒக்டோபர் நடுப்பகுதி வரை பொது முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை அவசியமாக இருப்பதாக அவுஸ்திரேலிய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

ஒரே ஒரு கொவிட்-19 தொற்று சம்பவம் கண்டறியப்பட்ட நிலையில் கடந்த ஓகஸ்ட் 12 தொடக்கம் சுமார் 400,000 கென்பரா குடியிருப்பாளர்கள் முடக்கநிலைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

தற்போது அங்கு 250 தொற்றாளர்கள் உள்ளனர். வேகமாகப் பரவக்கூடிய டெல்டா திரிபு இந்த கொத்தணிக்கு காரணமான நிலையில் அது குறைந்த அளவு பரவலை ஏற்படத்தியபோதும் தொடர்ந்து அவதான நிலை நீடிக்கப்பட்டுள்ளது.

சிட்னி மற்றும் மெல்போர்ன் உட்பட மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டின் தென்கிழக்கு பகுதியில் மில்லியன் கணக்கான மக்கள் முடக்கநிலைக்கு முகம்கொடுத்து வரும் சூழலில் அங்கு தடுப்பு மருந்து வழங்கப்படுவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Read next: சுமார் 20 பொதுமக்களை கொடூரமாக கொலை செய்த தலிபான்கள்! அதிகரிக்கும் பதற்றம்