தலைமைத்துவத்திலிருந்து விலகவுள்ளதாக விராட் கோலி அதிரடி அறிவிப்பு

Sep 16, 2021 02:40 pm

இந்திய அணியின் இருபதுக்கு இருபது அணியின் தலைமைத்துவ பதவியிலிருந்து விலகவுள்ளதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

டுபாயில் நடைபெறும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை அடுத்தே, பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தான் பதவி விலகுவதற்கான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய்ஷா மற்றும் தலைவர் கங்குலி ஆகியோரிடம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை வழிநடத்தும் நோக்கிலேயே, இருபதுக்கு இருபது கிரிக்கெட் அணித் தலைமை பதவியிலிருந்து விலக எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Read next: மன்னாரில் கனிய எண்ணெய் வளம் தொடர்பில் தரவு சேகரிப்பு!