விஜய்யின் 67வது படத்தின் அப்டேட் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

Jan 12, 2023 05:47 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் அஜித் இவர்கள் படம் ரிலீஸ் என்றாலே பண்டிகையை போல் அவர்களின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு படமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியானது. இரண்டு படங்களுக்கும் திரை விமர்சகர்கள் பாசிட்டிவ்வாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வாரிசு படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

அதில், ரொம்ப நாள் கழித்து விஜய் சார் இப்படி பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். இனி வரும் காலங்களில் விஜய்யின் 67 வது படத்தின் அப்டேட் வெளியிடுவேன் என கூறியுள்ளார். 

Read next: பிரான்ஸில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - அமுலாகும் தடை