குப்பையின் நடுவே மனித கால்கள் யாருடையது? கனடாவை உலுக்கிய கொலை சம்பவம்

Sep 12, 2021 12:25 pm

கனடாவில் குப்பைகளின் நடுவே மனித உடல் பாகங்கள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Ottawaவிலுள்ள Sheffield Road என்ற பகுதியில் அமைந்துள்ள மறுசுழற்சி மையம் ஒன்றில் நேற்று மதியம் குவித்துவைக்கப்பட்டுள்ள குப்பைகளுக்கு நடுவே மனித கால் ஒன்று கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் கிடைத்ததையடுத்து அங்கு பொலிஸார் சென்றுள்ள நிலையில், கொலை வழக்குகளை விசாரிக்கும் பொலிஸ் பிரிவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 58 வயதுடைய Ottawaவைச் சேர்ந்த ஜேம்ஸ் மக்கோலி நபரே இதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த கொலை தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read next: காணொளி: தமிழக செய்திகள் 12-09-2021