வாரிசு படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்

Nov 14, 2022 12:17 pm

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு இப்படம் தெலுங்கில் வாரசுடு என்ற தலைப்பில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் , கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டத்தில்,

தெலுங்கு திரைப்படங்களின் தயாரிப்பு செலவு அதிகரிப்பதால் தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில்

சங்கராந்தி(பொங்கல்) மற்றும் தசரா(விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 இதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு  பிரபல தயாரிப்பாளரும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தற்போதைய துணைத் தலைவருமான தில்ராஜு,

 பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும், நேரடி தெலுங்கு படங்களுக்கு

திரையரங்குகளை ஒதுக்கிவிட்டது போக மீதமுள்ள திரையரங்குகளை தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகும் படங்களுக்கு கொடுக்க வேண்டும்

என ஊடகங்களில் தெரிவித்திருக்கிறார்.

எனவே விநியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி சமீபத்தில் இப்படம் நேரடி தமிழ் படம் தான் என்று தெரிவித்திருந்த நிலையில்

இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் தயாரிப்பளார் தில்ராஜு வாரிசு படத்தை தெலுங்கில் வெளியிட அதிக திரையரங்குகளைக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வாரிசு படம் தெலுங்கில் அதிக திரையரங்குகளில் வெளியாவதற்கு சிக்கல் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போல் 2019ஆம் ஆண்டு ரஜினியின் பேட்ட பட தெலுங்கு டப்பிங்குக்கும் இந்த சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

 மேலும் தெலுங்கில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்கு முன்னணி நடிகர்கள் பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி படங்களான வீர சிம்ம ரெட்டி, வால்டர் வீரய்யா உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read next: தான் வெட்கப்படனும் என்று சொல்லிய அமைச்சர் சந்திர பிரியங்காவை வெட்கப்பட வைத்த சிறுவர்கள்