10 குழந்தைகளை கொன்று இரத்தத்தை குடித்த "ராகுலா"

Jul 16, 2021 10:37 pm

கென்யாவில் 10 குழந்தைகளை கொன்று சில குழந்தைகளின் குருதியை குடித்ததை போலீசிடம் ஒப்புக்கொண்டதாக கென்யாவின் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாஸ்டென் மிலிமோ வஞ்சுள என்ற 20 வயதுடையவரே இரண்டு குழந்தைகளை கொலை செய்த குற்றச்சாட்டில் நைரோபியில் பொலிஸாரால் கைது கைது செய்யப்படுள்ளான். இதே வேளையில் 10 குழந்தைகளை கொன்றதை போலீசாரிடம் தெரிவித்துள்ளதாகவும் இவ்வாறு கொலைசெய்யும் வேளையில் அவர்களின் நரம்புகளில் இரத்தம் குடித்தாகவும் தெரிவித்துள்ளான்.

இவன் 16 வயது இருக்கும் பொழுது 12 வயது சிறுமியை இவ்வாறு கொலை செய்ததாகவும் அவனின் கையால் கொலைசெய்யப்பட்ட 12-13 வயதான சிறுமிகளின் விபரங்களை கென்யா போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.


Read next: ரஷியாவில் 17 பேருடன் சென்ற மாயமான விமானம் கண்டுபிடிப்பு!