பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வள்ளுவர் கோட்டம் அருகில்அறப்போராட்டம் !

Sep 14, 2021 01:24 pm

தனி நல வாரியம், ஆகமவிதிகளை பின்பற்றி பூஜை நடைபெறும் கோவில்களில் ஆகமவிதிகளின்படியே அர்ச்சகர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பாக  அறப்போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது.

அதன் தலைவர் வழக்கறிஞர் ராஜாளி ஜெயபிரகாஷ்  தலைமையில் பொது செயலாளர் பாலாஜி ஆத்ரேயா முன்னிலையில் நடைபெற்ற இந்த அறப்போராட்டத்தில்,

உச்சநீதிமன்ற தீர்ப்பைமீறி ஆகமவிதிகளுக்கு எதிராக தமிழக அரசும்,இந்துசமய அறநிலையத் துறையும் அர்ச்சகர்களை நியமனத்தினை கைவிட வேண்டும்,

ஆகமவிதிகளை மீறி பிறப்பிக்கபட்டுள்ள அர்ச்சகர் நியமன அரசாணையை திரும்பபெற்று, ஆகமவிதிகளின்படியே அர்ச்சகர் நியமனம் தொடர வேண்டும்,

பொருளாதாரத்தில் பின்தங்கிய மூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, அந்தணர் நலவாரியம் அமைத்திட தமிழக அரசு பரிசிலிக்க வேண்டும்,  ஆலயபூஜைமுறைகளில் அரசு இந்துச்சமய அறநிலையத்துறை தலையிடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுருத்தி கண்டன முழக்கங்ள் எழுப்பப்பட்டன.

இந்த அறவழிப் போராட்டத்திற்கு சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலுள்ள அந்தணர் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read next: வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தடுப்பூசி ஏற்றும் பணிகள்!