வசந்த காலத்தில் தடுப்பு மருந்து வந்தாலும் வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பாது

3 months

செயற்றிறன்மிக்க கொரோனா தடுப்பு மருந்தினால் கூட வசந்த காலத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்கு கொண்டு வர முடியாது என முன்னணி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசியானது தொற்றை முடிவுக்கு கொண்டு வரும் புனித கிண்ணமாகவே பார்க்கப்படுகின்றது.

தடுப்பு மருந்தினால் எதனை அடைய முடியும் எப்போது அடைய முடியும் என்பது தொடர்பில் நாம் அறிந்திருக்க வேண்டும் என ரோயல் சமூக ஆய்வுக்குழு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் ஒரு வருடம் செல்லும் என்பதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது படிப்படியாக முன்னெடுக்கப்படு வேண்டும் என்றும் அவர்கள சுட்டிக்காட்டியுள்ளனர்.

வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காக 200ற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை விஞ்ஞானிகள் முன்னொருபோதும் இல்லாத அளவு வேகத்தில் தயாரித்து வருகின்றனர்.

சிலருக்கு இவ்வருடத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மேலும் சிலருக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் பெற முடியும் என்றும் சிலர் எதிர்வுகூறி வருகின்றனர்.

எவ்வாறாயினும் இது ஒரு நீண்ட கால செயற்பாடு என ரோயல் சமூக ஆய்வுக்குழு எச்சரித்துள்ளது.

மேலும் எண்ணிலடங்கா சவால்கள் எதிரில் உள்ளதாக அறிக்கைகளில் குறிப்பிடப்படுகின்றன.

தடுப்பூசி கண்ணாடி குவளைகள் சில தடுப்பு மருந்துகள் மறை 80 செல்சியஸில் பேணப்பட வேண்டும் எனவே குளிர்சாதனப்பெட்டி போன்ற மூலப்பொருள் வசதி குறித்து கேள்விகள் எழுகின்றன.

வருடாந்த இன்புளுவன்ஸாவை விடவும் பத்து மடங்கு வேகமாக கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து ஏற்றப்பட வேண்டும் என்றும் இதற்காக முப்பதாயிரம் பயிற்சிபெற்ற ஊழியர்கள் தேவைப்பாடுவார்கள் என்றும் பேராசிரியர் ஷாஹ் மதிப்பிட்டுள்ளார்.

தடுப்பு மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டன.ஆனால் முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றதா அல்லது கொவிட்டின் அறிகுறிகளை குறைக்கின்றதா என்பது குறித்து ஆய்வில் உறுதிப்படுத்தப்படவில்லை..

Read next: சில பாடங்களை சீன மாணவர்கள் பிரித்தானியாவில் தொடர தடை!