கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்

Nov 07, 2021 08:25 pm

அண்மையில் கோவிட் தாக்கி தனது பிறந்த குழந்தையை கையில் ஏந்த முன்னர் பலியான பெண்ணின் குடும்பத்தினர் கர்ப்பிணி பெண்களை கோவிட் வாச்சினை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறார்கள்.

இவ்வாறு பிர்மிங்கஹாம் நகரில் வாழும் 37 வயதான இறந்த பெண்ணின் சகோதரர் சாய்கா பர்வீன் தெரிவிக்கையில் தனது சகோதரி குழந்தை பிறக்கும் வரை தடுப்பு மருந்து பெறுவதை தாமதித்து வந்ததாக தெரிவித்தார்.

 

தமது குடும்பம் அனைத்தையும் இழந்துவிட்டதாக அவரின் சகோதரர் குயோம் முகல் தெரிவித்தார்.

 தனது சகோதரி தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்டு இருந்தால் அவர் உயிர் தப்புவதர்க்கு வழி இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.

 திருமதி பர்வீன் செப்டம்பர் மாதத்தில் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு  

வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்திருந்தார். 

 அவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்து இருந்தார்கள்-அந்த பெண் நவம்பர் மாதம் 1 பலியானார்.

Read next: கனடா: கோவிட் ஒரு சூழ்ச்சி கோட்பாடு என்று ஆர்ப்பாட்டம் செய்தவர்-பரிதாபமாக உயிரிழப்பு