விவாதத்தில் திடீரென இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா மீது பாய்ந்த டிரம்ப்!

3 weeks

கொரோனா வைரஸால் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்து இந்தியா உண்மையான எண்களை வெளியிடவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு ஜோ பைடனுடன் நடந்த விவாதத்தின் போது இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கொரோனா இறப்பு எண்ணிக்கையை குறைத்து சொல்வதாக குற்றம் சாட்டினார்.

மேலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதிலும் சீனா, ரஷ்யாவுடன் சேர்த்து இந்தியா மீதும் குற்றம் சாட்டினார் ட்ரம்ப். 

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். 

ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பைடன்  போட்டியிடுகிறார். 

முதன் முறையாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் டிவி நிகழச்சியில் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு இருந்தனர். பாக்ஸ் செய்தி சேனலில் இந்த விவாதம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த விவாத்தின்போது, அமெரிக்காதான் உலகிலேயே அதிகளவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று பைடன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கொரோனாவால் எவ்வளவு குடும்பத்தினர் தங்களது நெருங்கிய அன்புக்குரியவர்களை இழந்துவிட்டனர். 

பொறுப்பு இல்லாமல் ட்ரம்ப் நடந்து கொண்டார். இந்த விஷயத்தில் ஒரு முட்டாள் போல நடந்து கொண்டார். 

அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள மாஸ்க் அணிந்தாரே தவிர மக்களை காப்பாற்றுவதற்காக அணியுமாறு கூறவில்லை என்று பைடன் கூறினார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய ட்ரம்ப், 

சீனாவால் தான் இந்த துயரம் ஏற்பட்டுள்ளது. அதிபராக பைடன் இருந்து இருந்தால் அமெரிக்காவில் இரண்டு மில்லியன் மக்கள் உயிரிழந்து இருப்பார்கள் என்று சீனாவின் மீது பழியை தூக்கிப் போட்டார் ட்ரம்ப்.

மேலும் காற்றில் அசுத்தத்தை கலந்தவர்கள் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்று நாடுகள்தான் என்றார் டிரம்ப்.

Read next: டிரம்ப் ஒரு இனவெறியர் - பகிரங்கமாக விமர்சித்தார் ஜோ பைடன்