ஐ.நாவில் ஒன்றுதிரண்ட நாடுகள்! ரஷ்யாவுக்கு விழுந்த பேரிடி

May 12, 2022 04:59 pm

உக்ரைனில் ரஷ்யப் படைகள் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சிவிலியன் மரணதண்டனை, கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல் போதல் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் ஜெனீவா அவசரகால அமர்வில் பேசப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு, ஆதரவாக 33 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

12 உறுப்பு நாடுகள் வாக்களிக்கவில்லை, மேலும், எதிராக இரண்டு வாக்குகள் (சீனா மற்றும் எரித்திரியாவில் இருந்து) பதிவாகி உள்ளது.

இதையடுத்து குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read next: பிரான்ஸில் வேகமாக அதிகரிக்கும் 10 உணவு பொருட்களின் விலைகள்