உக்ரைன் - ஹெர்சன் நகர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்

May 13, 2022 06:26 am

உக்ரைனின் தெற்கில் உள்ள ஹெர்சன் நகரம் ரஷ்யாவுடன் இணைய விரும்புவதாக அதன் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அந்த நகரை இணைத்துக்கொள்ளும் படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கேட்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். 

அந்த யோசனையை ரஷ்யா வரவேற்கிறது. ஹெர்சன் நகரின் எதிர்காலத்தை அந்நகரமே முடிவு செய்ய வேண்டும் என்று ரஷ்யா கூறியது.

அப்பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தும் சாத்தியம் உள்ளது. அது ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஒருவகையான சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கும் வகையில் அமையும். 

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமான உக்ரைனியப் படையெடுப்பில் ரஷ்யாவிடம் வீழ்ந்த முதல் நகரம் ஹெர்சன் ஆகும். 

ஆண்டு இறுதிக்குள் அந்நகரம் முழுமையாக ரஷ்யாவின் சட்டத்துக்கு உட்பட்டுவிடும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹெர்சன் நகரம் 2014 ஆம் ஆண்டில் ரஷ்யா கைப்பற்றிய உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தின் வடக்கில் அமைந்துள்ளது. தீபகற்பத்திற்கான குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கு இந்த நகர் அவசியமானதாக உள்ளது.

Read next: வெள்ளிக் கிழமையும், பெண் தெய்வங்களும்!!