ரஷ்ய படை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக யுக்ரைய்ன் தெரிவிப்பு

Mar 04, 2022 01:09 pm

யுக்ரைய்னின்  தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் பல நகரங்களில் ரஷ்ய படையினர் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாக யுக்ரைய்ன் வெளிவிவகார அமைச்சர் திமித்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தொடர்பில் குலேபா எவ்வித ஆதாரங்களையும் மேற்கோள் காட்டாமல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டத்தின் செயற்றிறன் குறித்து பேசுவது மிகவும் சிரமமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் செத்தம் ஹவுஸில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read next: பாகிஸ்தானில் குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி