மூன்று கொலை முயற்சிகளில் இருந்து தப்பினார் யுக்ரைய்ன் ஜனாதிபதி

Mar 04, 2022 08:54 am

ரஷ்யாவின் தாக்குதல்கள் ஆரம்பித்தது முதல் மூன்று கொலை முயற்சிகளிலிருந்து தான்  தப்பித்துள்ளதாக யுக்ரைய்ன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்க்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் முதலாவது இலக்கு தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக த டைம்ஸ் தெரிவித்துள்ளார்.

யுக்ரைய்ன் ஜனாதிபதியை கொலை செய்வதற்காக இருவேறு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக வெக்னர் மற்றும் ச்செச்னெ; கிளர்ச்சிக்குழு என்பன அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த கொலை முயற்சி குறித்த உளவு தகவல் ரஷ்ய மத்திய பாதுகாப்பு பிரிவிடம் இருந்து கிடைக்கபெற்றதாக த வொஷிங்டன் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் ஆரம்பத்தின் போதே யுக்ரைய்ன் ஜனாதிபதியை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா முன்வந்தது.ஆனாலும் ஸெலென்ஸ்க்கி அதனை மறுத்துள்ளார்.

இந்த நிலையில் இவரது இந்த தீர்மானத்தை பல நாடுகள் வரவேற்றன.உரையின் போது யுக்ரைய்ன் ஜனாதிபதி மரியாதை,சுதந்திரம் மற்றும் ஊக்கப்படுத்தலின் உருவம் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்திருந்தார்.


Read next: உக்ரைன் உடனான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் - ரஷியா அறிவிப்பு