பிரெக்ஸிட் இடைக்காலத்தை முடிவுக்கு கொண்டுவர தயாராகுமாறு வியாபாரங்களுக்கு பிரித்தனியா வேண்டுகோள்

1 month

பிரெக்ஸிட் பரிமாற்று காலத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தயாராகுமாறு வியாபாரங்களை பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உடன்படிக்கை நிறைவுக்கு வந்தாலும் இல்லாவிட்டாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடையும் பரிமாற்று காலத்தை பிரித்தானியா நீடிக்காது என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

உடன்படிக்கை ஸ்தம்பிக்கும்பட்சத்தில் இருதரப்புக்கும் இடையில் ஏற்படும் இடைவெளிiயை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பரிமாற்று காலம் நிறைவடைய 81 நாட்கள் உள்ள நிலையில் ஜனவரி முதல் புதிய ஒரு ஆரம்பத்திற்கு ஐக்கிய இராஜ்ஜியம் தயாராக வேண்டும் என வணிகத்துறை அமைச்சர் ஆலோக் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

வியாபாரங்கள் தமது வதிவிட உரித்தை பதிவுசெய்துக்கொள்ள வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தின போது சுங்க ரீதியான செயற்பாடுகளுக்கு தயாராக வேண்டும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய இராஜ்ஜியம் ஜனவரி 31 ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியது.இந்த நிலையில் 2016 பிரெக்ஸிட் யோசனைக்கு 52 வீதம் ஆதரவாகவும் 48 வீதம் எதிராகவும் வாக்களிக்கப்பட்டு நான்கு வருடங்களாக உத்தியோகபூர்வமற்ற ஐக்கிய இராஜ்ஜியத்தின் அங்கத்துவம் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.

Read next: நாட்டை சிங்கள- பௌத்த நாடாக்க முயற்சி