மருத்துவ ஊழியர்களுக்கு சகநோய் மருந்தான BCG கொடுத்து பரிசீலிக்க பிரித்தானிய அரசு முடிவு

1 month

கசநோய்க்கு எதிராக பயன்படுத்தப்படும் BCG தடுப்பூசி மருந்தை கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துவது குறித்து பிரித்தானிய ஆய்வாளர்கள் ஆராய்ந்துவருகின்றனர்.

இதன் முதற்கட்டமாக பிரித்தானியாவின் பராமரிப்புத் தொழிலாளர்களுக்கு இந்த தடுப்பூசி மருந்தை பரீட்சித்து பார்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோக்கத்துக்காக பிரித்தானியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பராமரிப்புத் தொழிலாளர்களை பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

BCG எனும் குறித்த தடுப்பூசி மருந்து மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடையச் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் பயன்படுத்தப்படும் குறித்த மருந்து வகையானது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்ககூடியது என நிருபிக்கப்பட்டுள்ளதால் கொவிட் 19 க்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்கும் என பேராசிரியர் ஜோன் கெம்பல் குறிப்பி;ட்டுள்ளார்.

இதேவேளை தென்னாபிரிக்காவிலும் டீஊபு மருந்தை கொரோனா வைரசுக்கு எதிராக பயன்படுத்துவது தொடர்பில் பரீட்சிக்கப்பட்டுவருகின்றது.

மீண்டும் பிரித்தானியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துவரும் நிலையில் இத்தகைய மருந்து வகைகளை பயன்படுத்துவது குறித்து கடுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

எதிர்வரும் வசந்தகாலம் வரையில் கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்துவதற்கான  மட்டுப்பாடுகள் தொடரலாம் என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

 

 

Read next: பிரெக்ஸிட் இடைக்காலத்தை முடிவுக்கு கொண்டுவர தயாராகுமாறு வியாபாரங்களுக்கு பிரித்தனியா வேண்டுகோள்