ஐக்கிய இராஜ்ஜியத்தில் கொவிட் உயிரிழப்புகள் 70000 என்ற மைல்கல்லை எட்டியுள்ளது-டெய்லி மெயில் .

2 weeks

ஐக்கிய இராஜ்ஜியத்தில் 70,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த எண்ணிக்கை 67000 ஆக காணப்பட்டது.

இந்த எண்ணிக்கை அரசாங்கம் வெளியிட்ட 54,286 என்பதையும் விட அதிகமானதாக உள்ளது.

தற்போதைய கொவிட் உயிரிழப்புகள் அரசாங்க டேஸ்போட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு 28 நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 13 ஆம் திகதி வரை 1227 உயிரிழப்புகளே பதிவாகியுள்ளதாக வட அயர்லாந்து புள்ளிவிபரவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 5135 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக ஸ்கொட்லாந்தின் தேசிய பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இங்கிலாந்;து மற்றும் வேல்ஸில் 59549 மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது நவம்பர் 14ம் திகதிவரை பதிவாகிய எண்ணிக்கை.

மரணச்சான்றிதழ்களின் அடிப்படையில் 65911உயிரிழப்புகள் ஐக்கிய இராஜ்ஜியத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க டேஸ்போட்டில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி ஐக்கிய இராஜ்ஜியத்தில் 4343 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட எண்ணிக்கையை விடவும் ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் தகவலுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் உத்தியோகபூர்வ தகவல்களின் படி இன்றைய தினம் மேலும் 20252 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Source: Daily Mail

Read next: ஒரு நாளில் அதிக தொற்றுக்களை பதிவு செய்த ஒன்ராறியோ மாகாணம்