மோசமான தேர்தல் தோல்வியை தழுவிய போரிஸ் ஜோன்சன்

Jun 18, 2021 10:20 pm

லண்டனுக்கு வெளிப்பகுதியில் உள்ள வசதிவாய்ந்தவர்கள் உள்ள சேஷம் மற்றும் அமெர்ஷம் தொகுதியில் புதன் கிழமை நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியான போது தற்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் கட்சி லிபரல் டெமோகிராடிக் கட்சியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. லிபரல் டெமோகிராடிக் கட்சி போரிஸ் ஜோன்ஸனின் கன்செர்வேர்டிவ் கட்சியை விட 8,028  அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியை தனதாக்கி கொண்டது.

முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 1.6 விகித வாக்குகளை பெற்று நான்காவது இடத்தை பெற்றது. வசதி வாய்ந்தவர்கள் வாழும் நாடாளுமன்ற இருக்கையை கொண்ட இந்த தொகுதியை கன்செர்வேட்டிவ் கட்சி 1974 இல் இருந்து 50 விகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வந்துள்ளது. 2019 இல் அது 16,223 வாக்குகளால் வெற்றி பெற்று இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக போரிஸ் ஜோன்சன் எதிர்பார்த்த ஒருவிதமான தோல்வி என்று சமாளித்து பதில் கூறி இருந்தார் அதேவேளை லிபெரல் டெமோகிராடிக் கான்வேர்வேட்டிவ் கட்சியின் சுவர்கள் இடிய ஆரம்பித்துள்ளது என்றும் அவர்களிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் என்றும் கருது தெரிவித்தார்.

 

Read next: கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 - 60 km வரை அதிகரிக்கும்