பிரித்தானியாவில் ஒருவழியாக எரிவாயுவின் விலை வீழ்ச்சியடைந்தது

Oct 06, 2021 08:52 pm

பிரித்தானியவில் எரிவாயுவின் விலை இன்று கணிசமாக அதிகரித்து ரஷ்யா ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதாக அறிவித்த பின்னர் ஒருவழியாக குறைவடைந்தது.

 24 மணி நேரத்தில் 37 விகிததால் அதிகரித்த எரிவாயுவின் விலை ரஷ்யா ஜனாதிபதி புடின் அவர்கள் தமது நாடு ஐரோப்பாவுக்கான எரிவாயு ஏற்றுமதியை அதிகரிப்பதாக தெரிவித்த பின்னர் 400 பென்சாக  உயர்ந்து இருந்த ஒரு தேர்ம் எரிவாயு குறைவடைந்து உள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 60 பென்ஸ் ஆக இருந்த எரிவாயு உலக அளவில் அதன் தேவை அதிகமாக உள்ள காரணத்தாலும் உற்பத்தி குறைவாக உள்ள காரணத்தாலும் சடுதியாக உயர்ந்து இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 எரிவாயுவின் விலை சடுதியாக உயந்த காரணத்தால் பிரித்தானியவில் பல எரிசக்தி விற்பனை செய்யும் நிறுவங்கள் திவாலாகி மூடப்பட்டதும் இங்கு கவனிக்க தக்கது.

 புடின் அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து ஒரு தேர்ம் எரிவாயுவின் விலை 275 பென்ஸ் ஆக குறைந்துள்ளது.

 

Read next: பாகிஸ்தானில் பாரிய பூமியதிர்ச்சி! 20 பேர் உயிரிழந்ததாக தகவல்