ஒரு வாரத்தில் 50 விகிதத்துக்கு மேலாக அதிகரித்த பிரித்தானியாவின் கோவிட் உயிரிழப்புகள்

Jul 08, 2021 10:17 pm

இன்று பிரித்தானிய அரசு வெளியிட்ட தகவலின் படி கோவிட் தொற்றி 28 நாட்களுக்குள் 35 பேர்  உயிரிழந்துள்ளாரகள் மற்றும் 32,551     தொற்றுகள் பதிவாகி உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கோவிட் பாதிப்பின் முழு விபரம் பின்வருமாறு:

பிரித்தானிய அரசு இன்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றி 28 நாட்களுக்குள் 35 பேர்பலியாகி உள்ளார்கள். இதன் காரணமாக கொரோனா வைரஸ் தாக்கி 28 நாட்களுக்குள் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 128,336 ஆக உள்ளது. கடந்த 7 நாட்களில் 174 பேர் பலியாகி உள்ளார்கள். இறப்புகள் விகிதம் சென்ற வாரத்தோடு ஒப்பிடும்பொழுது 52.6% விகிதம் அதிகரித்துள்ளது.

இதேவேளை பிரித்தானியா மேலும் 32,551 தொற்றுக்களை பதிவு செய்ததன் காரணமாக மொத்த கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 5,022,893 ஆக உயர்ந்துள்ளது. சென்ற வாரத்தோடு ஒப்பிடும்பொழுது இந்த வாரம் தொற்றுகள் 34.9% விகிதம் அதிகரித்துள்ளது.

7 ஜூலை, 2021 வெளியிட்ட தகவலின் படி இதுவரை 45,601,445 பேருக்குத் முதல் தடுப்பு மருந்தும் 34,198,779 பேருக்கு இரண்டாவது தடுப்பு மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 79,800,224 தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுளள்ளது. பிரித்தானியாவின் சனத்தொகை 2019இன் மத்தியில் 66.8 மில்லியனாக ஆக இருந்தது. இதற்கிணங்க தற்பொழுது ஏறக்குறைய 68.265 விகிதத்துக்கு மேலான மக்களுக்கு முதல் தடுப்பூசிகள் செலுத்தபட்டுளள்ளது.

Read next: இலங்கையை விட்டுச் செல்ல சுமார் ஆறரை இலட்சம் பேர் தயார் நிலையில்! திடுக்கிடும் தகவல்