பிரித்தானியாவில் கோவிட் தொற்றின் இன்றய நிலவரம்

3 weeks

பிரித்தானிய அரசு இன்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றி 28 நாட்களுக்குள் மேலும் 96 பேர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக மொத்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 126,122 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 7 நாட்களில் 659 பேர் பலியாகி உள்ளார்கள். இறப்புகள் விகிதம் சென்ற வாரத்தோடு ஒப்பிடும்பொழுது 36.9 விகிதம் குறைவாகும்.

தேசிய புள்ளியியல் அலுவலகம்  வெளியிட்ட தகவலின் படி மார்ச் 5, 2021 ஆம் திகதிவரை 16,487 பேரின் மரணச் சான்றிதழ்களில் அவர்கள் இறந்ததற்க்கான காரணம் கோவிட் என்று குறிப்பிடுகிறது. மார்ச் 5 ஆம் திகதி தரவுகளின் படி அதற்கு முந்தய வாரம் 2,279 பேரின் மரணச் சான்றிதழ்களில் அவர்கள் இறப்புக்கு காரணம் கோவிட்-19 என்று குறிப்பிடப்பட்டுள்ளது-கோவிட்-19 தொற்றி 28 நாட்களுக்கு பின்னர் இறந்தவர்கள்.

இதேவேளை பிரித்தானியா மேலும் 5,587 தொற்றுக்களை பதிவு செய்ததன் காரணமாக மொத்த கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 4,291,271 ஆக உயர்ந்துள்ளது. சென்ற வாரத்தோடு ஒப்பிடும் பொழுது இந்த வாரம் தொற்றுகள் 7.5 விகிதம் குறைவாகும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பொறுத்தவரை 15 மார்ச் 2021 கிடைத்த தகவலின் படி புதிதாகத் தினமும் சராசரியாக 494 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதே வேளை தொற்று பிரித்தானியாவில் ஆரம்பித்ததிளிருந்து மார்ச் 15, 2021ஆம் திகதி வரை மொத்தம் 452,762 பேர் கோவிட் தொற்றின் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மார்ச் 18, 2021 அன்று வெளியிட்ட தகவலின் படி மொத்தம் 6,162 பேர் தற்பொழுது மருத்துவமனையில் கோவிட் தாக்கத்தின் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

மார்ச் 19 ஆம் திகதி 830 பேர் சுவாசகருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பிரித்தனியாவில் மார்ச் 19, 2021 ஆம் திகதி கிடைத்த தரவுகளின் படி ஒருவர் மற்றவருக்கு நோயைப் பரப்பும் ஆர் மதிப்பு 0.6 க்கும் 0.9 க்கும் இடையில் உள்ளது.

மார்ச் 13, 2021 வெளியிட்ட தகவலின் படி இதுவரை 26,853,407 பேருக்குத் முதல் தடுப்பு மருந்தும் 2,132,551 பேருக்கு இரண்டாவது தடுப்பு மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் சனத்தொகை 2019இன் மத்தியில் 66.8 மில்லியனாக ஆக இருந்தது. இதற்கிணங்க தற்பொழுது ஏறக்குறைய 40.19 விகிதத்துக்கு மேலான மக்களுக்கு முதல்  தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Read next: நெதர்லாந்தில் கோவிட் தொற்றின் பாதிப்பு எவ்வாறு உள்ளது? முழு விபரம் உள்ளே