உகண்டாவிற்கு கிடைத்த பொக்கிஷம் - 31 மில்லியன் மெட்ரிக் டன் தங்கம் கண்டுபிடிப்பு

Jul 05, 2022 03:12 pm

உகாண்டாவில் 31 மில்லியன் மெட்ரிக் டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. 

பல ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னர், நாட்டில் வெட்டி எடுக்க்கூடிய 31 மில்லியன் மெட்ரிக் டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவில் உள்ள எரிசக்தி மற்றும் கனிம மேம்பாட்டு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாலமன் முயிதா வெளியிட்டுள்ள அறிக்கைகளில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தங்கம் தங்க சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் கிரிப்டோ துறையில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில், உகாண்டா அரசாங்கம் Busia மாவட்டத்தில் தங்கப் பொருட்களை உற்பத்தி செய்ய சீன நிறுவனமான Wagagai தங்கச் சுரங்க நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியுள்ளது. 

நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள தங்க சுத்திகரிப்பு நிலையத்தை கட்டம் கட்டமாக கட்டத் தொடங்கியது. 

கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தை உடனடியாக வெட்டத் தொடங்கலாம் என்று Muyita கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read next: ஒரே தாக்குதல்... பலியான 200 ரஷ்ய வீரர்கள் - அதிரடி தாக்குதல் நடத்திய உக்ரைன்