சட்டரீதியான போராட்டங்களுக்கு பின்னர் 18 மாத லண்டன் தொழில் அனுமதியை பெற்றுள்ளது ஊபர்.

3 weeks

பாதுகாப்பு சிக்கல்கள் கருதி இடைநிறுத்தப்பட்ட லண்டன் ஊபர் தனது சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளது.

வரலாற்று தோல்விகளுக்கு மத்தியில் நிறுவனம் முறையான மற்றும் பொருத்தமான செயற்பாட்டாளராக இருந்துள்ளதாக திங்களன்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

கலிஃபோர்னியாவை  தளமாக கொண்ட நிறுவனம் தோல்விகளுக்கான பாணி என அழைக்கப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு அதற்காக வழங்;கப்பட்ட புதிய அனுமதியை வழங்க லண்டன் போக்குவரத்து துறை மறுத்தது.

அத்துடன் விளம்பரப்படுத்தப்பட்டதை தவிர ஏனைய ஓட்டுநர்கள் பயணிகளை அழைத்துச் சென்ற ஆயிரக்கணக்கான பயணங்களும் இரத்து செய்யப்பட்டிருந்தது.

காப்புறுதி ஆவண உறுதிப்படுத்தல் முறைமை மற்றும் அடையாளப்படுத்துவதற்கான நிகர நேரம் போன்றவற்றை விருத்தி செய்துக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படுவது தொடர்பிலும் ஊபர் வாதிட்டது.

2017 ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனத்தின் அனுமதியையும் லண்டன் போக்குவரத்து துறை இரத்து செய்திருந்தது.இது முக்கிய சந்தையில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியாகும்.        

எதிர்பார்க்கப்படுவதை அவர்களது துறையில் நியாயமான முறையில் சிறப்பாக மேற்கொள்வதையிட்டு தாம் திருப்தி அடைவதாக நீதிபதி டன் இக்ரம் தெரிவித்துள்ளார்.

தம்மால் இழைக்கப்பட்ட தவறுகள் குறித்து மன்னிப்பு கோரியது ஊபர்.இந்த நிலையில் கலிர்போனியா உட்பட ஏனைய பகுதிகளில் இதுகுறித்து பெரும் சவால்களையும் ஊபர் சந்தித்துள்ளது.

முடிவின் பின்னர் அமெரிக்க வர்த்தகத்தின் முந்தைய சந்தையில் ஊபரின் பங்குகள் 6 வீதத்தால் உயர்வடைந்துள்ளது.

Read next: நவ்லினினை சந்தித்துள்ளார் மேர்கல்