கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் கைது

Nov 16, 2022 01:01 pm

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் அருகே கட்டபொம்மன் நகர், கணேஷ் அவென்யூவில் சந்தேகபடும் படி நின்றிருந்த இருவரை பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணன் அவர்கள் பிடித்து விசாரித்து, சோதனை செய்ததில் அவர்களிடம் 5 கிராம் எடை கொண்ட 10 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. 

அதனடிப்படையில் இருவரும் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் சோதனை செய்த போது 12 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. 

விசாரணையில் இருவரும் பல்லாவரம் தனியார் பல்கலைகழகத்தில் படித்து வருவதும் விருதுநகரை சேர்ந்த பிரகாஷ்(21), நான்காம் ஆண்டு சட்டம் படித்து வருவதும், மற்றொருவர் கடலூரை சேர்ந்த நசீர்பாஷா(22), பி.டெக் படித்து வருவதும் தெரியவந்தது. 

இருவரையும் பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Read next: மடிக்கணினி சார்ஜர் வெடித்ததில் மாணவன் பரிதாபமாக பலி