அமெரிக்க மருத்துவமனையில் குண்டுவெடிப்பு! இருவர் பலி

3 months

அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா கிழக்கில் கனெக்டிகட் மாநிலத்தில் முதியவர்களுக்கான மருத்துவமனை ஒன்றில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனையில் சுகாதார நல அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், 

மேற்கு வளாகத்தில் நோயாளிகள் இல்லாத பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அல்ல. 

எனினும் நோயாளிகளுக்கான நலன் சார்ந்த சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.

Read next: தேர்தலுக்கப்பின் முதன் முறையாக வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப்