மாசடைந்த மோடெர்னா தடுப்பு மருந்தால் ஜப்பானில் இருவர் பலி

Aug 28, 2021 05:46 pm

ஜப்பானில் மோடெர்னா தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்ட இரண்டு ஜப்பானியர்கள் உயிரிழந்துள்ளனர்-இவ்வாறு கொடுக்கப்பட்ட மோடெர்னா தடுப்பு மருந்துகள் தூய்மை கேடு ஏற்பட்ட காரணத்தால் விநியோகம் நிறுத்தப்பட்டது என்று இன்று சனிக்கிழமை  ஜப்பானின் சுகாதார அமைச்சு வெளியிட்டது அறிக்கை தெரிவிக்கின்றது.

மோடெர்னா தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டு தினங்களில் இறந்த இருவரும் தமது 30 வயதுகளில் உள்ளவர்கள் என்றும், அவர்கள் தமது இரண்டாவது தடுப்பு மருந்தை பெற்றவுடன் பலியானதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவர்கள் கடந்த  வியாழன் இடைநிறுத்தப்பட்ட மோடெர்னா தடுப்பு மருந்துகளில் ஒன்றை பெற்றுக்கொண்டவர்கள் என்று அரசின் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது. இவர்களின் மரணம் தொடர்பாக விசாரணை தொடர்கிறது.

Read next: ஈராக்: அமெரிக்கா என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் தொடர்ந்து தங்குவோம்