அமெரிக்க கேபிடல் கலவரம் - முதன்முறையாக டிரம்பின் ஆதரவாளருக்கு கிடைத்த தண்டனை

Jul 20, 2021 07:08 am

அமெரிக்கா - வாஷிங்டனில் ஜனவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட கிளர்ச்சியில் பங்கு வகித்ததற்காக புளோரிடாவைச் சேர்ந்த மனிதருக்கு திங்களன்று எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தம்பாவைச் சேர்ந்த Paul Hodgkins என்பவருக்கே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கேபிடல் மீதான தாக்குதலின் போது அமெரிக்க செனட் அறைக்குள் சென்று, ஒரு உத்தியோகபூர்வ நடவடிக்கைக்கு தடையாக இருந்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

“Trump 2020”டி-ஷர்ட்டை அணிந்து, தோள்பட்டை மற்றும் கழுத்தில் கண்ணாடிகளுடன் ஹோட்கின்ஸ் படம் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் ஒரு தடி, ஹெல்மெட் மற்றும் பிற கலகக்காரர்களுடன் செல்ஃபி எடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக ஒரு மோசமான குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட முதல் கலகக்காரர் இவர்தான்.

அமெரிக்க கேபிடல் தாக்குதல் கலவரத்தில் 570 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திங்களன்று வாஷிங்டனில் நீதிமன்றத்தில் பேசிய ஹோட்கின்ஸ் மன்னிப்பு கேட்டார், மேலும் அவரது நடத்தை குறித்து வெட்கப்படுவதாகவும் கூறினார்.

இதையடுத்து நேற்று நடந்த வழக்கு விசாரணையில் Paul Hodgkinsக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


Read next: தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு !