பைஸர் தடுப்பு மருந்து நிறுவனம் தனக்கெதிரா செயல்பட்டதாக டிரம்ப் குற்றச்சாட்டு

2 weeks

வெள்ளை மாளிக்கு சென்ற ட்ரம்ப் மருந்து உற்பத்தி நிறுவவனங்கள் இரண்டையும் கடுமையாக சாடியுள்ளார்.

தேர்தலின் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகை;யின் ஊடகவியலாளர் சந்திப்பு அறைக்கு சென்றுள்ளார்.

அத்துடன் ஜோ பைடனை தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டும் வகையில் பாரியளவான மருந்தக நிறுவனத்தை கடுiமாக விமர்சித்த நிலையில் தற்போதும் தானே வெற்றியாளர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பைஸர் நிறுவனத்தின் பெயரை தவறாக பிஸா என உச்சரித்ததுடன் பைஸர் நிவனமும் பிக் பார்மா ஆகிய நிறுவனங்கள் தேர்தலுக்கு பின்னர் சிறந்த தடுப்பு மருந்தை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிராசரத்தின் போது பிக் பார்மா நிறுவனம் மில்லியன் கணக்கான டொலர்களை செலவளித்து தனக்கு எதிராக விளம்ரபம் செய்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியாவது தான் வெற்றிபெற்றுவிட்டதாகவும் 74மில்லியன் வாக்குகள் தொடர்பில் தேடியறிவதாகவும் ட்ரமப் தெரிவித்துள்ளார்.

இறுதியாக மீள எண்ணப்பட்ட வாக்குகளின் படி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் சுமார் 80 மில்லியன் வாக்குகளை பெற்றுள்ளார்.

ஒரு பாரிய தொழிநுட்ப மற்றும் அவமரியாதையான ரீதியில் பிக் பார்மா தனக்கு எதிராக செயற்பட்டதாகவும் டரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்களுக்கு செய்த ஊழல் கண்டுபிடிக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மிச்சிகன் மற்றும் செனட் குடியரசு தலைவர்களை சந்திப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னரே ட்ரம்ப் இவ்வாறான பாரிய குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.

Read next: பிரேசிலில் பல்பொருள் அங்காடியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவர்! வெடித்தது போராட்டம்